பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இருவர் கனடாவில் அடையாளம் காணப்பட்டுள்ளமை ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
டுர்ஹாம் (Durham) பிராந்தியத்தில் இந்த புதிய தொற்றுடன் இரண்டு பேர் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.
அதேவேளை, இது தனக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை என்று கூறியுள்ள, வன்கூவர் தொற்றுநோயியல் நிலையத்தில் மருத்துவர் பிரையன் கொன்வே (Brian Conway) , உண்மையில் இந்த தொற்று அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னரே, இந்த வகை கிருமி பரவத் தொடங்கி விட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, புதிய வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள தொற்றாளர்கள் இருவரும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவில்லை என்றும் தெரியவந்துள்ளது.