இந்தியாவில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள், அடுத்தமாதம் ஆரம்பமாகும் என்று, எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கான ஒத்திகைகள் நாளை தொடங்கவுள்ளது.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும், ‘அஸ்ட்ரா செனகா’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள, கொரோனா தடுப்பு மருந்துக்கு அடுத்த மாதம் அனுமதி, வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, தடுப்பு மருந்து வழங்கும் பணிகளுக்கான ஒத்திகைகள், பஞ்சாப், அசாம், ஆந்திரா மற்றும் குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களில், நாளை தொடக்கம் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது.
தடுப்பூசி செலுத்துவதில் உள்ள அனைத்து நடைமுறை சிக்கல்களையும் கண்டறிந்து, அதை முன்கூட்டியே களையவே, இந்த ஒத்திகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.