காலநிலை மாற்றத்தை கவனிக்கத் தவறினால் அழிவு நிச்சயம் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதானோம் (Tedros Adhanom) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று அனைத்துலக நோய் தடுப்பு தினம் கடைப்பிடிக்கப்படும் நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“கொரோனா தொற்று பாதிப்பு என்பது கடைசி பேரிடர் இல்லை என்பதை வரலாறு எமக்கு தெரிவிக்கிறது.
மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் வாழிடமாக உள்ள புவியை அச்சுறுத்தும் காலநிலை மாற்றம் குறித்து கவனிக்கத் தவறினால் அழிவு ஏற்படுவது நிச்சயம்.
தொற்றுநோய்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் நாம் பின் தங்கியுள்ளோம்.” என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதானோம் (Tedros Adhanom) மேலும் தெரிவித்துள்ளார்.