கமரூனில் பாரஊர்தி மீது பேருந்து மோதிய விபத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
கமரூன் நாட்டின் மேற்குப் பகுதியில் வீதியில் சென்று கொண்டிருந்த பேருந்து, இன்று அதிகாலை எதிர்பாராத வகையில் பாரஊர்தி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 37 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேர் காயம் அடைந்துள்ளனர்.
பேருந்தில் 60 பேர் பயணம் செய்ததாக கூறப்படும் நிலையில், பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடி விட்டு திரும்பிக் கொண்டிருந்தவர்களே, இந்த விபத்தில் சிக்கியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.