சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனாத் தொற்று பரவியதை அடுத்து அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
புதிதாக உறுதிப்படுத்தப்பட்ட 21 கொரோனா வைரஸ் பாதிப்புகள் சீனாவில் பதிவாகியுள்ளதாக தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
எனினும் நோய் தொடர்பான புதிய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. விடுமுறை காலம் என்பதால் கொரோனாத் தொற்று பரவலை தடுக்க சீனா இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது.
கொரோனா தொற்றில் தீவிரம் காட்ட வேண்டும் என்பதால் பீஜிங்கில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்கு விடுமுறை அளிக்கப்படாது என்றும் சீன அரசு அறிவித்துள்ளது.