பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா கனடாவில் இதுவரையில் மூவருக்கு தொற்றியிருப்பது உறுதியாகியுள்ள நிலையில் அதனை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் கனடிய சுகாதாரத்துறை தீவிர கவனம் எடுத்துள்ளனர்.
வீரியம் கூடிய குணாம்சங்களைக் கொண்டிருக்கின்ற இந்த வைரஸ் கனடாவில் பெரிய அளவில் பரவுமாக இருந்தால் நிலைமைகள் மோசமாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், இதனை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசிகளை பயன்படு:த்தவது தொடர்பிலும் சம்பந்தப்பட்ட தடுப்பூசி உற்பத்தி நிலையங்களுடன் பேச்சுக்கள் ஆரம்பக்கப் படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது