யாழ்.மாநகர சபை பணியாளர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வருகையைப் பதிவு செய்யும் இயந்திரத்தை சீர்செய்வதற்கு ஒவ்வொரு ஊழியர்களின் வேதனத்தில் 1000 ரூபா கழிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
செயலிழந்த கைவிரல் அடையாள பதிவு இயந்திரத்தை மாநகர சபை நிர்வாகம் திருத்துவதற்குப் பதிலாக, 300 ஊழியர்களிடம் தலா 1000 ரூபா கழிக்கப்பட்டுள்ளமை அநீதியானது என்றும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.