லெபனான் மற்றும் சிரிய நாட்டவர்களுக்கிடையில் நடந்த தனிப்பட்ட மோதலின் போது, அகதிகள் முகாம் ஒன்று தீக்கிரையாகியுள்ளது.
சிரியாவில் இருந்து வெளியேறிய அகதிகளுக்காக லெபனானின் திரிபொலி (Tripoli ) நகரில் அமைக்கப்பட்டுள்ள முகாமில், 370-க்கும் அதிகமான அகதிகள் வசித்து வந்த நிலையில், அங்குள்ள சிலருக்கும், லெபனானை சேர்ந்ந சிலருக்கும் இடையே இன்று திடீரென மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டினால், அகதிகள் முகாம் தீப்பற்றி எரிந்தது.
தீயணைப்பு படையினர் முகாமில் பற்றிய தீயை அணைக்க தீவிர முயற்சி மேற்கொண்ட போதும்,, தீ வேகமாக பரவியதால் அகதிகள் முகாம் முழுவதும் தீக்கிரையானது.
இந்த தீவிபத்தில் 4 பேர் படுகாயடைந்துள்ளனர்.
குடியிருப்புகள் அனைத்தும் எரிந்து நாசமானதால், அகதிகள் பெரும் இன்னலை சந்தித்துள்ளனர்.