கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பளவு பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றினால், பத்தாயிரத்து 404பேர் பாதிக்கப்பட்டதோடு 163பேர் உயிரிழந்துள்ளனர்.
கனடாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.
கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை ஐந்து இலட்சத்து 52ஆயிரத்து 020பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 14ஆயிரத்து 963பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 79ஆயிரத்து 864பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 715பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.