அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி தொடரும் என்று, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமையே அறிவிக்கும் என்று, அந்தக் கட்சியின் தமிழக தலைவர் முருகன் கூறி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி தொடரும்.
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும்.
பாஜகவின் தமிழக தலைவர்களின் கருத்து ஏற்புடையதாக இருக்காது, தேசிய தலைமையின் முடிவே இறுதியானது.” என்றும், அவர் கூறியுள்ளார்.