அமெரிக்கா ஒரே நேரத்தில் நான்கு வரலாற்று நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள ஜோ பைடன் , தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக எதிர்வரும் ஜனவரி 20ம் நாள் பதவியேற்க உள்ள ஜோ பைடன், அமெரிக்கா எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் குறித்து கீச்சகத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “ கொரோனா வைரஸ் மற்றும் பொருளாதாரம் தொடக்கம், காலநிலை மாற்றம், இன நீதி வரை எமது நாடு ஒரே நேரத்தில் நான்கு வரலாற்று நெருக்கடிகளை எதிர்கொள்கிறது.
ஜனவரி மாதத்தில், வீணடிக்க நேரம் இருக்காது. அதனால் தான் நானும் எனது அணியும் முதல் நாளிலேயே நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகிறோம்.” என்றும், ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.