விடுமுறைக் காலத்தில் ஒன்ராறியோ அரசாங்கம் திட்டமிடப்பட்ட வகையில் தடுப்பூசிகளைப் போடத் தவறியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
ஒன்ராறியோ மாகாணம், இந்த மாதம் 90 ஆயிரம் பைசர் –பயோஎன்டெக் (Pfizer-BioNTech) தடுப்பு மருந்துகளைப் பெற்றுள்ள போதும், அவற்றில் சிறியளவே இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன், புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள மொடேனா (Moderna) தடுப்பு மருந்தும் ஒன்ராறியோவுக்கு வரத் தொடங்கியுள்ளது.
இந்த மாத இறுதிக்குள் 53 ஆயிரம் பேருக்கு போடக் கூடிய இந்த தடுப்பு மருந்து கிடைத்து விடும் என்று தெரிவிக்கப்படுகிறது.
எனினும், மாகாணத்தில் கடந்த 24ஆம் நாள் வரை, 10 ஆயிரத்து 756 பேருக்கு மாத்திரமே தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்களில் தடுப்பூசிகளை செலுத்தும் வேகம் குறைந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.