கொரோனாவை விட மிகமோசமான ஆபத்துக்கு உலக நாடுகள் தயாராக வேண்டும் என்று, உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய வீரியமிக்க கொரோனா வைரஸ் பல நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலைத் திட்டத் தலைவர் மருத்துவர் மைக்கேல் ஜே. றியான்( Michael Ryan) ‛இது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய நேரம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கொரோனாவை விட மிக மோசமான ஆபத்துக்கு உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும்,’ என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.