தாம் அமைச்சர் பதவியில் இருந்து விலகியதாக வெளியாகி வரும் தகவலில் எதுவித உண்மையும் இல்லை என நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.
நீதியமைச்சர் அலி சப்ரி அமைச்சுப் பதவியில் இருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகியதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கொரோனா பாதிப்புக்குள்ளான முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்யும் கோரிக்கைக்கு அரசாங்கம் இணக்கம் தெரிவிக்காமையின் காரணமாக நீதி அமைச்சர் தனது அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகுவதாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளபோதும் அதனை அவர் ஏற்க மறுத்துள்ளதாக கடந்த சில மணிநேரமாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.