கொரோனா தொற்றுப் பரவ ஆரம்பித்ததை அடுத்து, 9 மாதங்களுக்குப் பின்னர் முதலாவது சுற்றுலாப் பயணிகள் குழு இன்று சிறிலங்காவுக்கு வந்துள்ளது.
உக்ரேனில் இருந்து 185 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிய சிறப்பு விமானம் இன்று பிற்பகல் 2 மணியளவில் மத்தல விமான நிலையத்தை அடைந்துள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொற்றினால் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையை மீளமைக்கும் வகையில், முன்னோடி நடவடிக்கையாக உக்ரேனில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்த திட்டம் வெற்றியளித்தால் நாட்டின் அனைத்து விமான நிலையங்களும் திறக்கப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.