கொரோனா தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக, உலக சுகாதார நிறுவனத்துடன், சிறிலங்கா அரசாங்கம் இன்று பேச்சுக்களை நடத்தியுள்ளது.
கொரோனா தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்கான நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதியின் மேலதிக மூத்த ஆலோசகர் லலித் வீரதுங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்த்தன, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோர் இந்தப் பேச்சுக்களில் பங்கெடுத்துள்ளனர்.
உலக சுகாதார நிறுவத்தினால் பரிந்துரைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தை சிறிலங்காவுக்கு இறக்குமதி செய்வது குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா போன்ற நாடுகளில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்துகளில் சிறிலங்காவுக்கு பொருத்தமான மருந்து எது என்பது குறித்தும் இதன் போது ஆராயப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் சனத்தொகையில் 20 வீதமானோருக்கு உலக சுகாதார நிறுவனம் கொரோனா தடுப்பு மருந்தை வழங்க முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.