திருகோணமலை – சம்பூர் பகுதியில் மின்னல் தாக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பூர் நையந்தன் வயல் பகுதியில் நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக சம்பூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள வயலுக்குச் சென்றிருந்த போதே, சம்பூரைச் சேர்ந்த 65 வயதுடைய செல்லத்துரை ராமமூர்த்தி என்பவரே உயிரிழந்துள்ளார் என்றும் அவர்கள் கூறியுள்ளார்.
சடலம் மீட்கப்பட்டு மூதூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.