சீனாவின் வடக்கு பகுதியில் பொது இடத்தில் நடத்தப்பட்ட கத்திக் குத்து தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
லியோனிங் மாகாணத்திலுள்ள கையுவான் நகரில் பொது குளியலறைக்கு வெளியே நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கத்தியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென எதிர்ப்பட்ட அனைவரையும், கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
தகவறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று தாக்குதல் நடத்திய மர்ம நபரை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் மேலும் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.