சிறிலங்கா இராணுவத் தளபதியும், பாதுகாப்புச் செயலாளரும் ஜெனரல்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதற்கமைய, சிறிலங்கா பாதுகாப்புச் செயலரான கேமல் குணரத்ன மேஜர் ஜெனரல் தரத்தில் இருந்து ஜெனரல் தரத்துக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
அதேவேளை சிறிலங்கா இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவும், லெப்டினன்ட் ஜெனரல் தரத்தில் இருந்து ஜெனரல் தரத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.
இன்று தொடக்கம் இந்த பதவி உயர்வு நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





