தென்னாப்பிரிக்காவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான கொரோனா தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்ட நாளுக்குப் பிறகு, ஜனாதிபதி சிரில் ரமபோசா (SRIL RAMAPOSHA) புதிய கடுமையான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘தொற்றுநோய்களில் நாடு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஆகவே உட்புற மற்றும் வெளிப்புற கூட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மது விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளது. குறைந்தது ஜனவரி 15ஆம் திகதி வரை இந்த கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.