தமிழகம் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில், சட்டமன்ற தேர்தலிலும் அந்த கூட்டணி தொடருமா என கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து, அறிவிப்பை வெளியிட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பொறுப்பாளர்களுக்கு கட்சியின் நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதனால், சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவுக்கு கூட்டணியில் அதிக தொகுதிகள் ஒதுக்கப்படாவிட்டால் தனித்து களமிறங்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது.