நாடாளவிய ரீதியில் உள்ள நீண்டகால பராமரிப்பு நிலையங்கள் தொடர்பாக சமஷ்டி அரசாங்கம் மீளாய்வொன்றை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளது.
இதுதொடர்பான ஆரம்ப கட்டச் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக, சிரேஷ்ட பிரஜைகள் கொரோனா தாக்கதினால் மிகுந்த நெருக்கடிக்குள் உள்ளாகி வருவதால் இவ்விதமான ஆய்வின் மூலம் மேம்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்று கருதுவதாக கூறப்படகின்றது.
இதேவேளை சிரேஷ்ட பிரஜைகளுக்கு தடுப்பூசியை முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.