ஈரானின் அல்போர்ஸ் மலையில் பனிச்சரிவில் சிக்கிய 12 மலையேற்ற வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 8 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
20-க்கும் அதிகமான மலையேற்ற வீரர்கள் குழுவாக இணைந்து நேற்று மலையேறிய போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஈரான் மீட்புப் படையினர் பனிச்சரிவு ஏற்பட்ட இடத்தில், உலங்குவானூர்தி மூலம் தேடுதல் நடத்திய போது, 12 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
எஞ்சியோரை தேடும் பணி தீவிரமாக இடம்பெற்று வருகிறது.