கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (Pope Francis), வத்திக்கான் செயலகத்தின் மாநில நிதிச்சொத்துக்கள் மற்றும் நிரந்தர சொத்துக்களை இழக்கும் புதிய ஆவணத்தில் கையெழுத்திட் டுள்ளார்.
அதன்படி ஊழல் விசாரணைக்கு உட்பட்ட நன்கொடைகள் மற்றும் முதலீடுகளில் நூற்றுக்கணக்கான மில்லியன் யூரோக்களை நிர்வகித்ததைத் தொடர்ந்து போப் பிரான்சிஸ் (Pope Francis), வத்திக்கான் அரசின் நிதிச் சொத்துக்கள் மற்றும் நிரந்தர சொத்துக்களை முறையாக அகற்றியுள்ளார்.
போப் கையெழுத்திட்ட புதிய சட்டம் 2021 பிப்ரவரி 4 இன் காலக்கெடுவிற்குள் அனைத்து இருப்புக்களையும் மற்றொரு வத்திக்கான் அலுவலகத்திற்கு மாற்றுவதை மாநில செயலகம் கோருகிறது.
இந்த மாற்றங்கள் வத்திக்கானின் மாநில செயலகத்தால் நன்கொடைகள் மற்றும் முதலீடுகளை தவறாக நிர்வகித்ததாக பல ஆண்டுகளாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு ஒரு வத்திக்கான் குற்றவியல் விசாரணையின் பிரதிபலிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.