யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம் கொத்தணியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ். போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
666 பேரினது மாதிரிகள் இன்று யாழ். போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.
இதன்போதே, இணுவில் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
இதனையடுத்து மருதனார்மடம் சந்தைக் கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது.