ரொறன்ரோவில் ரொபோகன் (toboggan) மலையில் நேற்று மாலை, அதிகளவான மக்கள் கூடியிருந்த நிலையில், அங்கு, மாகாணத்தின் கொரோனா முடக்க விதிகளை யாரும் மீறவில்லை என்று மிசிசாகா (Mississauga) நகரம் தெரிவித்துள்ளது.
பிர்ச்வுட் பூங்காவில் (Birchwood Park), நேற்று மாலை குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் பனியால் மூடப்பட்ட மலையிலிருந்து சறுக்கி, விளையாடுவதில் ஈடுபட்டிருந்தனர் என்று கூறப்படுகிறது.
இதன்போது, தனிமைப்படுத்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த போதும், அவ்வாறு யாரும் விதிகளை மீறவில்லை என்று மிசிசாகா (Mississauga) நகரம் தெரிவித்துள்ளது.