லக் சதொச நிறுவனத்தின் தலைவராக சிறிலங்கா கடற்படை அதிகாரியான றியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ், நியமிக்கப்பட்டுள்ளார்.
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
லக் சதொச நிறுவனத்தின் தலைவராக இருந்த நுஸாட் பெரேரானா அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், முன்னாள் கடற்படை அதிகாரியை சிறிலங்கா அரசாங்கம் நியமித்துள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தில் படை அதிகாரிகள் அதிகளவில் முக்கிய பதவிகளில் நியமிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.