யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில், பெண் உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
கரணவாய் பகுதியில் இடம்பெற்ற இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில், அதே இடத்தைச் சேர்ந்த 29 வயதுடைய, சந்திரமோகன் சஜிந்தன், 55 வயதுடைய சண்முகம் சிவஞானசுந்தரம், 35 வயதுடைய தேவராசா ரஞ்சிதா ஆகியோர், படுகாயமடைந்த நிலையில், பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.