வீரியம் மிக்க கொரோனா வைரஸ் தொற்றுடன் ஆறு பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பிய ஆறு பேரே இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரைவைச் சேர்ந்த 3 பேர், ஹைதராபாத்தைச் சேர்ந்த 2 பேர், புனேவைச் சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உருமாறிய அதிதீவிர கொரோனா உறுதி செய்யப்பட்ட ஆறு பேரும் தனித்தனி அறைகளில் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.