கொரோனா தொற்று சூழலில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதைப் பிற்போடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நேற்று முன்தினம் மாலை சிறிலங்கா ஜனாதிபதி செயலகத்தில் நடந்த ஆளும்கட்சி தலைவர்களின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், மாகாணசபைத் தேர்தல்களை விரைவாக நடத்துவது குறித்து கலந்துரையாடப்பட்ட போதும் கொரோனா பரவல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், மகாசங்கத்தின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டும், தேர்தல்களைப் பிற்போடுவதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது.