ஆகாஷ் ஏவுகணையை ஒன்பது நட்பு நாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு இந்திய மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ள, தரையில் இருந்து வான் இலக்குகளைத் தாக்கக் கூடிய ஆகாஷ் ஏவுகணைகளை வாங்குவதற்கு, தென்கிழக்காசியா மற்றும் ஆபிரிக்காவில் உள்ள இந்தியாவின் ஒன்பது நட்பு நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.
இந்தநிலையில், புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஆகாஷ் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.