இந்தியாவுடனான இருதரப்பு உடன்பாட்டின் அடிப்படையில், கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கான சாத்தியங்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.
ஒக்ஸ்போர்ட் -அஸ்ட்ரா செனகா (Astrazeneca ) தடுப்பு மருந்தை இந்தியாவிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கான உடன்பாடு ஒன்றை செய்து கொள்வது குறித்து கவனம் செலுத்தப்படுவதாக சிறிலங்கா அதிபரின் முதன்மை ஆலோசகர் லலித் வீரதுங்க, கூறியுள்ளார்.
இதன் மூலம் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொடையாகவோ அல்லது அரசுகளுக்கிடையிலான உடன்பாடு மூலமோ இந்த தடுப்பு மருந்தை பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ள லலித் வீரதுங்க, இல்லாவிட்டால், போட்டி ஏலத்தின் அடிப்படையில் மருந்து பெற்றுக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.