கிழக்கு மாகாணத்தில் நேற்று ஒரே நாளில், 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சே திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பேலியகொட கொத்தணி உருவாகிய பின்னர் கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.
நேற்று மட்டக்களப்பு மாவட்டத்தில், காத்தான்குடியில் 46 பேரும், மட்டக்களப்பு நகரில் 6 பேரும், ஏறாவூரில் 5 பேரும், ஆரையம்பதி, பட்டிப்பளை, வவுணதீவு , ஓட்டமாவடி ஆகிய இடங்களில் தலா ஒருவரும், அடையாளத் காணப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை தெற்கில், 14 பேரும், கல்முனை வடக்கு, காரைதீவு , உஹண ஆகிய இடங்களில் தலா ஒருவரும், தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் மூதூரில் 5 பேரும், உப்புவெளி மற்றும் குச்சவெளி பகுதிகளில் தலா ஒருவரும், நேற்று தொற்றாளர்களாக அறியப்பட்டுள்ளனர் என்றும் சுகாதார அதிகாரிகள் மேலும் கூறியுள்ளனர்.