வான்கூவரில் சட்டங்களை மீறி ஒன்றுகூடலை மேற்கொண்ட நபர் ஒருவரை காவல்துறையனிர் கைது செய்துள்ளனர்.
கொரோனா தடுப்பு விதிகளை மீறி இளம் வயதினரை ஒருங்கிணைத்து கேளிக்கை கொண்டாட்டமொன்றை நபர் ஒருவர் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது எழுந்த அதிக ஒலிகளால் அயலவர்கள் காவல்துறையினரிடத்தில் முறைப்பாடு செய்துள்ளனர் இதனை அடுத்து அவ்விடயத்திற்கு வருகை தந்திருந்த காவல்துறையினர் கேளிக்கை கொண்டாட்டத்திற்கு காரணமானவரை கைது செய்யததோடு ஏனையவர்களை எச்சரித்து விடுவித்தது.
கைது செய்யப்பட்ட நபருக்கு 2ஆயிரத்து 300டொலர்கள் அபராதத் தொகையை விதிக்கப்பட்டுள்ளது.