அருவியாற்றுப் பாலத்துக்கு அடியில் நீராடிய போது, சுழியில் அகப்பட்டு காணாமல்போன கிராம அலுவலர் இன்று காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
தோமஸ்புரி கிராம அலுவலராக பணியாற்றிய 26 வயதுடைய ஜனார்த்தனன் என்பவரின் சடலமே இன்று அரிப்பு பழைய தோணித்துறையில் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் அருவியாற்றுப் பாலத்தின் அடியில் விடுமுறைக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது இவர் சுழியில் அகப்பட்டு காணாமல் போயிருந்தார்.
இரண்டு நாட்களாக தேடியும் கிடைக்காத நிலையில், இன்று காலை சடலம் கரையொதுங்கியிருந்ததை, மீனவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.