ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரா செனெகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு பிரித்தானிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் ஏற்கனவே, பைசர் நிறுவனம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்து மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை ஆரம்பித்துள்ளன.
இந்தநிலையில், பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் ‘அஸ்ட்ரா செனெகா’ நிறுவனமும், இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் கோரி விண்ணப்பித்திருந்தன.
பிரித்தானியாஅரசு இந்த தடுப்பூசிக்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த தடுப்பு மருந்தை முதல்முறை செலுத்தி, 4 தொடக்கம் 12 வாரங்கள் இடைவெளிக்குள் மீண்டும் செலுத்த வேண்டும் என்றும், கொரோனா அறிகுறிகளை தடுப்பதில் பாதுகாப்பான மற்றும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், அஸ்ட்ரா செனெகா நிறுவனம் தெரிவித்துள்ளது.