நடிகர் ரஜினிகாந்தை மக்கள் நீதி மய்யத்தின் தலைலர் கமல்ஹாசன் இன்று சந்திக்கவுள்ளார்.
முதற்சுற்று பிரசாரக் கூட்டங்களை நிறைவு செய்துகொண்டு சென்னை திரும்பும் கமல்ஹாசன் ரஜினிகாந்தை சந்தித்து முதலில் அவருடைய உடல் நலம் குறித்து விசாரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் ரஜினியை தனக்குஆதரவளிக்கும் படி நட்புறவின் அடிப்படையில் கோருவேன் என்று முன்னதாகவே கமல்ஹாசன் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.