நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவை நீக்குவதற்கு, சீன ஜனாதிபதி அனுப்பி வைத்த குழு ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளது.
நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து பிரதமர் சர்மா ஒலிக்கும், துணைப் பிரதமர் பிரசந்தாவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதல்களால், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்துள்ளது.
இரு தரப்பினருக்கும் இடையிலும், மீண்டும் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக, சீன ஜனாதிபதி நியமித்த குழு சில நாட்களுக்கு முன் நேபாளத்துக்கு சென்றிருந்தது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் துணை அமைச்சர் குவோ யெஸோ தலைமையிலான குழுவினர், இருதரப்பு தலைவர்களையும் சந்தித்து பேச்சு நடத்தினர்.
நாடாளுமன்றத்தைக் கலைக்கும் பரிந்துரையை திரும்ப பெறுமாறு அவர்கள் பிரதமர் ஒலியிடம் வலியுறுத்திய போதும், அவர் அதனை ஏற்க மறுத்துள்ளார்.
அதேவேளை, நாடாளுமன்ற கலைப்பை திரும்ப பெறும் வரை பேச்சு நடத்த முடியாது என்று பிரசாந்தா தரப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதனால் சீன உயர்மட்டக் குழு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளது.