தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டு விடுமுறைக்காலத்தில் நாட்டை விட்டு வெளியேறியமைக்காக ஒன்ராரியோ நிதி அமைச்சர் ரோட் பிலிப்ஸ் (Rod Phillips) பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
உடனடியாக நாடு திரும்பவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதோடு 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படவுள்ளதாகவுமு; அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தான் திட்டமிட்ட வகையில் செயற்படவில்லை என்று குறிப்பிடும் அமைச்சர், டிசம்பர் 13ஆம் திகதி தனது துணைவியாருடன் நாட்டை விட்டு வெளியேறியமையை உறுதிப்படுத்தியுள்ளார்.