அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது, தேர்தலுக்கு பின்னரே, முடிவு செய்யப்படும் என்று பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் ரவி தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணி கட்சியான பா.ஜ.க அதனை ஏற்றுக்கொள்ள மறுப்பதால் சர்ச்சை உருவாகியுள்ளது.
இந்தநிலையில், பாஜக மேலிட பொறுப்பாளர் ரவி இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, தேர்தலுக்கு பின்னர் பெரும்பான்மையைப் பொறுத்து தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூடி முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.
தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின், தொகுதி பங்கீடு குறித்து பேசப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.