மொடர்னாவின் இரண்டு மருந்தளவு தடுப்பூசிகளை ஒன்றாக பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறு ஒன்ராரியோவின் கொரோனா தடுப்பூசி விநியோக திட்டத்தின் தலைமை அதிகாரியான ஓய்வுபெற்ற ஜெனரல் ரிக் ஹில்லியர் (Rick Hillier) கோரியுள்ளார்.
கனடிய சுகாதாரத்துறைக்கு அவர் அனுப்பிய எழுத்துமூலமான ஆவணத்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மொடர்னா தடுப்பூசியின் முதலாவது மருந்தளவை முதலிலும் அதன் இரண்டாவது மருந்தளவை பிறிதொரு தினத்திலும் செலுத்துவதில் காணப்படுகின்ற இடர்பாடுகள் பற்றியும் அவர் எடுத்துரைத்தார்.
எனினும். இந்த விடயம் சம்பந்தமாக சுகாதார அதிகாரிகள் இன்னமும் தீர்மானம் ஒன்றை எடுத்திருக்கவில்லை.