யேமன் நாட்டின், ஏடன் வானூர்தி நிலையத்தில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
யேமனில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசாங்கத்தின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள், இன்று ஏடன் வானூர்தி நிலையத்தில் வந்திறங்கிய சிறிது நேரத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வானூர்தியில் இருந்து இறங்கிய, புதிய அமைச்சர்கள் புறப்படத் தயாராக இருந்தபோது குண்டு வெடிப்பு இடம்பெற்றதாகவும், எனினும், அமைச்சர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும், யேமன் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்தக் குண்டுவெடிப்பினால், மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.