முக்கிய செய்திகள்

2021ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு நாளை

42

2021ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வினை நாளை ஆரம்பிப்பதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் 2021 ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வுகள் நாளை முதல் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இதன்படி, கடை, அலுவலக ஊழியர் திருத்தச் சட்ட மூலம் உள்ளிட்ட 4 திருத்தச் சட்டமூலங்கள் நாளைய தினம், விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

அத்துடன், தண்டனை சட்டக் கோவையின் திருத்தச் சட்ட மூலம் உள்ளிட்ட 3 திருத்தச் சட்டமூலங்கள் நாளை மறுதினம் தினம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

மேலும், புலமைச் சொத்து திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மற்றும் விமான நிலைய வரி உள்ளிட்ட 10 கட்டளைகள் ஆகியன எதிர்வரும் 7 ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *