முக்கிய செய்திகள்

2021 புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள்

432

2021 புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு இன்று தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள ஆலயங்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

புத்தாண்டை முன்னிட்டு, கிறிஸ்தவ தேவாலயங்களில்  நள்ளிரவு ஆராதனைகள் சிறப்பாக இடம்பெறுகின்ற போதும், இம்முறை கொரோனா தொற்று நிலைமை கருதி பெரும்பாலான தேவாலயங்களில் நள்ளிரவு ஆராதனைகள் இடம்பெறவில்லை.

இன்று காலையில் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

யாழ்ப்பாணத்தில் மரியன்னை பேராலயம், வவுனியாவில் பூவரசந்தீவு புனித அன்னாள் தேவாலயம், மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் தேவாலயம், மன்னார், புனித செபஸ்தியார் தேவாலயம் உள்ளிட்ட முக்கிய தேவாலயங்களில், சிறப்பு ஆராதனைகள் இடம்பெற்றன.

சமூக இடைவெளியைப் பேணி, சுகாதார விதிமுறைகளுக்கு அமைய இந்த புத்தாண்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

அதேவேளை, தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள இந்து ஆலயங்களிலும், இன்று காலை புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டுள்ளன.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *