ஒன்ராறியோவில் நீண்டகால பராமரிப்பு நிலையங்களில் தங்கியுள்ளவர்களுக்கு மொடேனா தடுப்பூசி போடும் பணியை சுகாதார அதிகாரிகள் நேற்று ஆரம்பித்துள்ளனர்.
ரொரன்ரோவின் டான்போர்த் (Danforth) பகுதியில் நீண்டகால பராமரிப்பு இல்லம் அமைந்துள்ள செஸ்டர் (Chester) கிராமத்தில் நேற்றுக் காலை 9:30 மணியளவில் இந்த தடுப்பூசி போடும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த இல்லத்தில் உள்ள 198 பேரில், 197 பேர் தடுப்பூசி போட நேற்று ஒப்புதல் அளித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.