கர்நாடகத்தில் 8 மாதங்களுக்குப் பிறகு இன்று பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.
இதன்படி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் ஆரம்பமாகியுள்ளன.
அத்துடன் 6,7,8,9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வெளிப்புறக் கல்வித் திட்டத்தின் மூலம் கல்வி பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வீடுகளுக்கு சென்று பாடங்கள் எடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்தியாவில் கொரோனா தொற்று படிபடியாக குறைந்து வருகின்றது. அத்துடன் பிரித்தானியாவில் பரவி வருகின்ற கொரோனா வைரஸின் புதிய பிறழ்வு குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.