சீனாவிலும் திரிபுநிலைக்குள்ளான புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் இருந்து சீனா திரும்பியுள்ள 23 வயதுடைய இளம்பெண் ஒருவருக்கு புதிய வகை வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீனா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உருமாறிய புதிய கொரோனா வைரஸ் பிரித்தானியா தவிர்ந்து அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளில் உறுதி செய்யப்பட்டு வருகிறது.