சீனாவில் அனைத்து பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் என தேசிய சுகாதார ஆணையத்தின் துணை அமைச்சர் ஜெங் யிக்சின் (JANG YEGIN) தெரிவித்துள்ளார்.
சீன தயாரிப்பான சினோஃபார்ம் தடுப்பூசி உருவாக்கிய நாட்டின் முதல் உள்நாட்டு கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளநிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சீனாவில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளோம். முடிந்தவரை அந்தத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும் உடல் தகுதி படைத்த அனைவருக்கும் பல்வேறு கட்டங்களில் தடுப்பூசி செலுத்தி கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பாற்றல் அணை எழுப்பப்படும் என்று துணை அமைச்சர் மேலும் கூறினார்.