நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பை 2021ஆம் ஆண்டு கொண்டு வரட்டும் என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தவண்ணம் உள்ளனர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 2021ஆம் ஆண்டு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பை கொண்டு வரட்டும் என கூறி உள்ளார். நம்பிக்கை மற்றும் ஆரோக்கியம் மேலோங்கட்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் நாடு முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறி உள்ளார்.
இதேவேளை, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் காங்கிரஸ் முக்கிஸ்தர் ராகுல் காந்தி ஆகியோரும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
ராகுல்காந்தி இந்த புத்தாண்டிலாவது விவசாயிகளில் கோரிக்கைக்கு நீதியான பதில் கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.