கிளிநொச்சியில், நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிராந்திய முகாமையாளர், இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி – கரடிபோக்கு சந்தியில் அமைந்துள்ள நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடக்கு மாகாண பிராந்திய அலுவலகத்தின் முகாமையானரான 47 வயதுடைய அதிகாரியே நேற்று கைது செய்யப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.
மாவட்ட ரீதியில் அறுவடை செய்யப்படும் நெல்லினை அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரிசி ஆலைகளுக்கு வழங்கி, அங்கிருந்து அரிசியை சதொச உள்ளிட்ட நிறுவனங்களிற்கு விற்பனை செய்யும் நடைமுறையே பின்பற்றப்பட்டு வருகிறது.
இதற்கு மாறாக, கிலோ ஒன்றுக்கு 3 ரூபாவை இலஞ்சமாக பெற்றுக் கொண்டு வெளி மாவட்ட அரிசி ஆலைகளுக்கு இவர் நெல்லை விற்பனை செய்து வந்தார் என்று கூறப்படுகிறது.
அரிசி ஆலை உரிமையாளரிடம் 5 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரிய நிலையிலேயே நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.